சம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது பாலை நிலமாக இருந்த இப்பகுதியை நெய்தல் நிலமாக பதிகம் பாடி மாற்றினார். அதனால் இத்தலம் 'புஞ்சை' என்று வழங்கப்படுகிறது.
மூலவர் 'நற்றுணையப்பர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'மலையமான் மடந்தை' மற்றும் 'பர்வதராஜ புத்திரி' என்னும் திருநாமங்களுடன் இரண்டு அம்பாள் சன்னதி உள்ளது.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், பைரவர், சூரியன் முதலானோர் தரிசனம் தருகின்றனர்.
சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோயில். ஆவுடையார் கோயில் கொடுங்கை, திருநனிபள்ளி கோடி வட்டம், திருவீழிமிழலை வௌவானத்தி மண்டபம் ஆகியவை வேலைப்படுடையவை.
திருஞானசம்பந்தரின் தாயாரான பகவதி அம்மையார் பிறந்த தலம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|